போதைபொருள் ஒழிப்பு தினம் என்று தெரியுமா..? தெரிவோம் அறிவோம்-18
உலகில் பலரும் இன்று பல விஷயங்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர். பொன், பொருள், நிலம்.., காதல், பெண்.., மொபைல் போன், ஆன்லைன் கேம்ஸ்.. சில விதமான அடிமைதனங்களில் இருந்து நம்மால் வெளிவந்து விட முடியும்..
ஆனால் பலருக்கும் மேற்பட்டோர் இன்று போதை பொருள்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர், அதில் இருந்து வெளிவர முடியாமல் தவிகின்றவர்கள் பலர், ஒரு சிலர் போதைப் பழக்கத்தில் இருந்து வெளிவர முயற்சி செய்வார்கள்.
அதில் இருந்து மீண்டு வந்தவர்களும் உண்டு, ஒரு சிலர் மீள முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. இந்த போதை பொருள்களுக்கு அடிமையாக முதல் காரணம். அதன் விற்பனை போதை பொருளை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கின்றது. அதற்கான முயற்சிகளை தமிழக அரசு செய்துக்கொண்டு தான் வருகிறது.
இருந்தும் போதை பொருள் விற்பனையை தடுக்க சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் ஜூன் 26ம் தேதி கொண்டாடப் படுகிறது. இதுவரை நடந்த கணக்கெடுப்பில் 5 லட்சம் கோடிக்கும் மேல் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும்.
அதில் 7 லட்சம் கோடிக்கும் மேல் லாபம் கிடைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.. போதைபொருள் அடிமை தனத்தில் இருந்து விடுபட முயற்சிப்பவர்கள்., இன்றைய நாளில் இருந்து அதற்கு அடிமையாகமல் இருந்து பாருங்கள்., அல்லது இன்று ஒருநாள் அதை செய்யாமல் இருக்கலாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.