கறிவேப்பிலை பற்றி உங்களுக்கு தெரியுமா..?
நாம் தினமும் சமைக்கும் பாரம்பரிய உணவு அனைத்திலும் கறிவேப்பிலைவாசனைக்காக சேர்த்துக்கொள்வோம்.
கறிவேப்பிலை வெறும் வாசனைக்காக மட்டும் தான் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு, கறிவேப்பிலை மருத்துவத்திலும் முக்கியத்துவம் அளித்துள்ளது. ஆனால் பலரும் அதை உதாசினமாக தூக்கி எறிந்துவிடுகிறோம்.
கறிவேப்பிலையில் கால்சியம், கார்போ ஹைட்ரேட், ஃபைபர், பொட்டாசியம் என அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.
கறிவேப்பிலையில் ஃபோலிக் அமிலம் இருப்பதால் ரத்த சோகை நோயில் இருந்து பாதுகாக்கிறது.
கறிவேப்பிலை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நீரிழிவு நோயை சரி செய்யவும் உதவுகிறது,
மேலும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைகிறது.
கறிவேப்பிலையை எண்ணெயில் வறுத்து, அதை பொடி செய்து. அதனுடன் முந்திரி, சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட்டால் பித்த நரை நீங்கும்.