சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்துதல் மற்றும் முதலீடுகளை திரட்டுவதற்கும் ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த நிதிநிலை அறிக்கை கூட்டம் மற்றும் மானிய கோரிக்கை கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழகத்தில் புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளித்தும் தமிழக முதலமைச்சர் இந்த மாத இறுதியில் ஜப்பான் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து முதலீடுகளை திரட்டுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சரவையில் சரிவர செயல்படாத அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குறைந்த செயல்பாடுகளை உடைய அமைச்சர்களுக்கு மாற்றாக புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சரவையில் புது முகங்களாக டிஆர்பி ராஜா, சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
Discussion about this post