டைமண்ட் ஃபேஷியல் இனி வீட்டிலே செய்யலாம்..! முகம் ஜொலிக்கும்..!
- கிளென்சிங்:
- பால் – 2 ஸ்பூன்
- பஞ்சு
- ஸ்க்ரப்:
- ஓட்ஸ் அல்லது கோதுமை மாவு – 2 ஸ்பூன்
- பால் – 2 ஸ்பூன் (வறண்ட சருமம்) அல்லது ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன் எண்ணெய் சருமம்)
- மசாஜ்:
- தயிர் – 3 ஸ்பூன்
- தேன் – 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன் (எண்ணெய் பசை சருமத்திற்கு மட்டும்)
- பேக்:
* சந்தன தூள் – 1 ஸ்பூன்
* ரோஜா நீர் – 2 ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- டோனர்:
- ரோஜா நீர்
- வெள்ளரிக்காய் சாறு
கிளென்சிங்: முகத்தை பேஸ் வாஷ் செய்து நன்றாக கழுவ வேண்டும். பின் காய்ச்சிய பாலை பஞ்சில் நனைத்து முகத்தில் தேய்த்து காயவிட்டு அலசி வர வேண்டும்.
ஸ்க்ரப்: ஓட்ஸ் மற்றும் கோதுமை மாவுடன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கி முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
மசாஜ்: ஒரு கிண்ணத்தில் தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கிக் கொள்ளவும். அதனை முகத்தில் தேய்த்து மேல் நோக்கி மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக்: ஒரு கிண்ணத்தில் சந்தனத்தூள், ரோஜா நீர், மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து அலசி வர வேண்டும்.
டோனர்: கடைசியாக ரோஜா நீர் மற்றும் வெள்ளரிச்சாறு ஆகியவற்றை ஒரு ஸ்பிரே பாட்டலில் கலந்து முகத்தில் ஸ்பிரே செய்து வர முகம் நல்ல ஈரப்பதமாக இருக்கும். பின் மாய்ஸ்சரைசர் முகத்தில் தேய்த்து வர முகம் பளப்பளப்பாக இருக்கும்.
இதனை வாரம் ஒரு முறை தவறாமல் செய்து வர முகம் நல்ல பொலிவாக இருக்கும்.