கஞ்சா விற்பனை இந்த மாவட்டத்தில் மட்டும் அதிகமா..? தீவிர சோதனையில் போலீஸ்..!
தமிழ்நாட்டில் போதைப்பொருல் புழக்கம் அதிகரித்து இருப்பதால் அதனை கட்டுபடுத்தும் வகையில் போதை பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு காவலர்கள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று,
அரியலூர் மாவட்டம் கும்பகோணம் சென்னை தேசிய நெடுஞ்சாலை நெல்லித்தோப்பு மேம்பாலத்தில் மீன்சுருட்டி போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே சிலர் போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அரசு பேருந்தில் கஞ்சாவை கடத்தி வந்த கடலூர் மாவட்டம் ஈச்சம் பூண்டியை சேர்ந்த விநாயகம், அரியலூர் மாவட்டம் மெய்காவல் புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து 2லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ஒரிசாவில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து 10 கிராம் பாக்கெட்களாக போட்டு ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரியவந்தது.
அதனையடுத்து இருவரையும் கைது செய்து இந்த கடத்தலில் இன்னும் யார் ஈடுபட்டுள்ளனர். என்பது பற்றி போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..