புதன்கிழமை இதை செய்து பாருங்க..! உங்க வாழ்க்கையிலும் ஒரு மேஜிக்..!!
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழி இருக்கிறது.., அதற்கு காரணம் புதன் கிழமை அன்று நாம் செய்யும் எந்த நற்செயலும் வெற்றியில் மட்டுமே முடியும்.., புதன் கிழமை என்பது புதன் பகவானுக்கு சிறந்த நாள் என்று சொல்லுவார்கள். ஆனால் அதை விட விநாயகருக்கே மிக சிறந்த நாளாக சொல்லப்படுகிறது.
புதன் கிழமை என்று விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் தடைபட்டு கொண்டு வரும் அனைத்து செயல்களும் வெற்றியில் முடியும் என்று சொல்லுவார்கள்.. புதன் கிழமை விநாயகர் வழிபாடு பற்றி இதற்கு முந்தைய குறிப்பில் குறிப்பிட்டு இருக்கிறோம்.. தகவலை விரிவாக படிக்க அது உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
புதன் கிழமை அன்று.. “வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, மற்றும் நகை வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். அது மேலும் மேலும் நமக்கு செல்வதை சேர்க்கும்.
புதன் கிழமை அன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டலாம்.., அது குழந்தைக்கு சிறந்த புகழை கொடுக்கும்.
புதன் கிழமை அன்று திருமணம் செய்தால்.., புதுமண தம்பதிகளின் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும்.
கல்வி அறிவில் பின் தங்கிய மாணவர்கள்.., புதன் கிழமை அன்று கோவிலுக்கு சென்று வழிபட்டால்.., கல்வி அறிவு அதிகரிக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..