நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்..! குறைந்தது தங்கம் விலை..! இன்றைய தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..?
ஜூன் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது பின் தங்கம் விலை குறைந்தது, மீண்டும் தங்கம் விலை குறைவு உயர்வு என ஒரு ஏற்றம் இறக்கம் இல்லாமல் இருந்து வந்தது, தற்போது தங்கம் விலை இரண்டு நாட்களாக குறைந்து காணப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து 5430 விற்கப்படுகிறது, நேற்று 70 ரூபாய் குறைந்து 5437 ரூபாய்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் 56 ரூபாய் குறைந்து 43,440 விற்கப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 43,496.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 48 ரூபாய் குறைந்து 35,584 ரூபாய்கும். ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ரூபாய் குறைந்து 4,448 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 74.80 காசுக்கும். ஒரு கிலோ வெள்ளியின் விலை 74,800 ரூபாய்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்கள் தங்கம் விலை குறைவாக விற்று வருவதால்.., இல்லத்தரசிகள் இது குட் நியூஸ் என்றும் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் ஏற்றம் இறக்கமின்றி இருப்பதால் இந்த விலையும் நிலையற்றது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.