வியாழக்கிழமை அன்று இதை செய்து பாருங்க..!! தடை பட்ட காரியங்கள் கை கொடுக்கும்..!!
சாயிபாபாவிற்கு ஷீரடியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கோவில்கள் உண்டு.., பல பெண் பக்தர்கள் அவருக்கு வீட்டிலேயே புகைப்படம் மற்றும் சிலை வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
ஷீரடி சாய்பாபா சிவ பெருமானின் அம்சமாகவும், தத்தாரேயரின் வடிவமாகவும் நினைத்து வழிபாடு செய்வார்கள் இவரை மனித உருவில் வந்த கடவுளாகவும், மகானாகவும், குருவாகவும் பலர் சாய்பாபாவை போற்றுகின்றனர்.
சாய் பாபாவிற்கு ஏராளமான பக்தர்கள் இருக்கின்றனர். அதற்கு காரணம் யார் என்ன வரம் கேட்டாலும் உடனடியாக நிறைவேற்றி விடுவார்.
வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று பாபாவிற்கு பிடித்த உணவை படைத்து தீப ஆராதனை செய்து வழிபட்டால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் என மக்கள் நம்புகின்றனர்.
மஞ்சள் நிற மலர்கள் சாய்பாபாவிற்கு விருப்பமான பூவாகும். சாமந்தி அல்லது சூரிய காந்தி போன்ற பூக்கள் சாய்பாபாவிற்கு ரொம்ப பிடிக்கும். பழ வகைகளில் ஆரஞ்சு பழம் சாய் பாபாவிற்கு மிகவும் பிடித்தமான பழமாகும். இதை வியாழக்கிழமைகளில் படைத்து வழிப்பட்டால் தடைப்பட்ட காரியங்கள் உடனே கை கொடுக்கும்.
இந்த வேண்டுதலை தொடர்ந்து 9 வாரங்கள் செய்தால் இன்னும் சிறந்த பலன் கிடைக்கும்.
Discussion about this post