ஆலோசனை வேண்டாம்..! களத்தில் இறங்கிய ஸ்டாலின்..! டிக் அடிக்கப்பட்ட பெயர்கள்..?
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று கடந்த சில நாட்களாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிகழும் சில சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
அதனை தொடர்ந்து சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரின் கொலை நாடு முழுவதும் பெரும் திர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக தேசிய அளவில் தலித் அமைப்புகள் இடையேயான எதிர்ப்புகளை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அதிரடியாக களத்தில் இறங்கியது என சொல்லலாம் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு. அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் திறமையான அதிகாரிகள் என சொல்லலாம்.
அருண் இளமையான துடிப்பான அதிகாரி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர். அதோடு இன்று தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ள முடிவு பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சொல்லலாம். அதாவது மேற்கண்ட அதிகாரிகளை தேர்வு செய்வதில் ஸ்டாலின் யாரிடமும் ஆலோசனை செய்யவில்லை.
அவராகவே தேர்வு செய்தவர்கள்தான் இவர்கள் எல்லோரும். இவர்களின் பெயரை அவரே டிக் அடித்து முதலமைச்சர் ஸ்டாலின் பணியிட மாற்றம் செய்துள்ளார் என சொல்லப்படுகிறது. இப்படி இதுவரை தமிழக அரசியலில் பொதுவாக நடக்காத விஷயம் இன்று அதிகாரிகள் மாற்றத்தில் நடந்துள்ளது இதுவே முதல்முறை என சொல்லப்படுகிறது.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..