இன்ஸ்பெக்டர்களுக்கு அருண் போட்ட உத்தரவு..! 6000 ரவுடிகள் பெயர் லிஸ்ட்..! சென்னையில் ஒரே நாளில்..!
சென்னையில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அதிகாரிகள் பலர் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த அதிகாரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரம் முதல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வரை தமிழ்நாட்டில் அடுத்தடுத்து தொடர் சம்வங்கள் நடந்து வரும் நிலையில் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு ரெட் நோட் சென்றுள்ளது என சொல்லப்படுகிறது.
அதாவது தமிழக அரசு இது போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கட்டாயம்.
அருண் இளமையான துடிப்பான அதிகாரி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்கனவே உளவுத்துறையில் நல்ல பெயர் எடுத்தவர். அதோடு இன்று தமிழ்நாடு காவல்துறையில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (வடக்கு) அஸ்ரா கர்க் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு நரேந்திரன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, அப்பொறுப்புக்கு அபின் தினேஷ் மோதக் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களுக்கு ப்ரீ ஹாண்ட் கொடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். குறிப்பாக யாரிடமும் ஆலோசனை செய்யாமலே முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னையில் ரவுடிகளின் அராஜகங்களை குறைக்கவும், கொலைகளை கட்டுப்படுத்தவும் காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையாக ப்ரீ ஹேண்ட்டை முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
காவல்துறை அதிகாரிகள் விரைவில் முக்கியமான ஆக்சன்களை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் புதிய கமிஷ்னராக பொறுப்பேற்றுள்ள அருண் நேரடியாக ரவுடிகளின் வீடுகளுக்கு, சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து முதற்கட்டமாக சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று அதிரடி சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கொலை வழக்கின் குற்றப்பின்னணியில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் லிஸ்டை எடுத்துள்ள கமிஷ்னர் அருண். சென்னையின் பெருநகரம் முழுவதும் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கே நேரில் சென்று ஆய்வு செய்து, அதனை பற்றிய விவரங்களை சமர்பிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு அருண் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ரவுடியிசத்தை விட முடியாது என சொல்லும் ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அருண் உத்தரவிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ