“நீ வெறும் கான்ஸ்டபிள் தான்” . சாதித்து காட்டிய இளைஞர்..!!
ஆந்திராவில் சக ஊழியர்கள் முன்னால் சர்கிள் இன்ஸ்பெக்டரால் அவனமானப்படுத்த கான்ஸ்டபிள், தனது வேலையை விட்டுவிட்டு, யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டர் :
ஆந்திரா மாநிலத்தின் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த உதய் கிருஷ்ணா ரெட்டி, வயது (30) என்பவர் கடந்த 2013 ஆண்டு காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பணியில் இருக்கும் போது, அவரது மேலதிகாரி ஒருவர் சக ஊழியர்கள் முன்னிலையில் “நீ வெறும் கான்ஸ்டபிள் தான் என்பதனை மனதில் வைத்துக் கொள்” என கூறி அவமானப்படுத்தியுள்ளார்.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ரெட்டி தனது வேலையை விட்டுள்ளார். யுபிஎஸ்சி எனப்படும் இந்திய குடியியல் பணிக்கு படித்து வெற்றி பெற்றால் தான் தன்னால் அதிகாரத்து வர முடியும் என முடிவெடுத்த அவர் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற யுபுஎஸ்சி தேர்வு முடிவின் தரவரிசையில், உதய் கிருஷ்ணா ரெட்டி 780-வது இடத்தை பிடித்து, சாதனை படைத்துள்ளார்.
இச்செய்தி X தளத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. தனக்கு ஏற்பட்ட அவமானத்தை, வெற்றியாக மாற்றி, சாதித்து காட்டிய உதய் கிருஷ்ணா ரெட்டியின் தீர செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..