திமுக பாஜக கூட்டணியா..? கனிமொழி எம்.பி கொடுத்த நச் பதில்..!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் கழுத்தை நெரித்து, குரலை நிறுத்தி விட வேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு நிதி தராமல் இருக்கும் – பாஜகவுடன் – முதல்வர் மு.க.ஸ்டாலின் இணைந்து செயல்படுவாரா..?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அருந்ததிய சமூகத்திற்கு உள்ள இட ஒதுக்கீடு வழங்கியது மட்டுமின்றி, உச்ச நீதிமன்றம் வரை உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி மற்றும் பாராட்டு விழா கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் தலைமை வகித்தார். இதில் சமூக நலன் மகளிர் அமைச்சர் கீதா ஜீவன், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தியூர் செல்வராஜ், மக்கள் விடுதலைக் கட்சி மாநில தலைவர் முருகவேல் ராசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்..
அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்பி பேசுகையில் ஒன்றியத்தில் ஆளும் அரசு ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ மனசாட்சி உள்ள அத்தனை பேருக்கும் தெரியும் இந்திய சுதந்திரப் போராட்டம் எங்கு ஆரம்பித்தது இந்தியா முழுவதும் தீயாய் பரவியது சுதந்திரத்தை பெற்று தந்தது என்பது தெரியும்..
இப்படிப்பட்ட ஒரு தியாகத்தை செய்த ஒரு சமூகத்திற்கு உரிமை கிடைக்கவில்லை என்பதை உணர்ந்து ஒரு தாயாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 3 சதவீத உள் ஒதுக்கீடு உருவாக்கி தந்தார். இந்த உள் ஒதுக்கீடு மூலமாக இச்சமூகத்தை சேர்ந்த பலரும் உயர் கல்வி பயின்று இன்றைக்கு அரசு உயர் பதவியில் இருக்கின்றனர்..
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றாலே போர்க்குணம் போராட்டம் என்பதுதான் அவருடைய மறுபெயர். தான் புதைக்கப்பட வேண்டிய இடத்திற்கு கூட போராடிய தலைவர் என்றால் அது தலைவர் கருணாநிதி தான்.அவர் நம்மை விட்டு நீங்கிய பிறகு அவர் பெற்ற முதல் வெற்றி அவருக்கான இடம் ,அவர் பெற்ற இரண்டாவது வெற்றி மூன்று சதவீத உள் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது .பெரியார் அண்ணா கருணாநிதி வழியில் ஆட்சி நடத்துபவர் முதல்வர் மு க ஸ்டாலின்.
நாணயத்தை ஒன்றிய அரசு தான் வெளியிட முடியும் மற்றவர்கள் வெளியிட முடியாது. சில இடங்களில் சில நல்ல மனிதர்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதர் தான் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், அவர் மனம் திறந்து தலைவர் கருணாநிதியை பற்றி பேசுகிறார் பாராட்டுகிறார். இதை வைத்துக்கொண்டு பாஜக விற்கும் திமுகவிற்கும் நெருக்கம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள்..?
தொடர்ந்து பாஜகவை விமர்சனம் செய்து கொண்டிருக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின், அவர்களை எதிர்க்கக்கூடிய முதல் குரலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் உள்ளது..
அந்தக் குரலை, எதிர்ப்பை எப்படியாவது கழுத்தை நெரித்து விட வேண்டும், குரலை நிறுத்தி விட வேண்டும் என்பதற்காக தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை தரமாட்டோம் தரமாட்டோம் என்று நின்று கொண்டிருக்க கூடிய ஒன்றிய அரசுடன் தலைவர் கருணாநிதியின் மகன், அவரின் நீட்சியாக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் (பாஜக) இணைந்து போகக் கூடியவரா என்ற கேள்வியை இப்படி கேள்வி கேட்பவர்களை நோக்கி நான் வைக்கிறேன்.
எந்த காலத்திலும் எந்த கட்டத்திலும் தமிழர்களின் உரிமைகளை, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளை எப்படி உச்ச நீதிமன்ற வரை சென்று உங்களுக்காக நீதியை நியாயத்தை நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்று வந்திருக்கிறார்.
தொடர்ந்து தமிழகத்தின் குரலாக, போராளியாக, ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக தலைவனாக தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் போராடுவார் என்றும், எத்தனை கருத்து வேறுபாடு இருந்தாலும் தமிழர்களாக, தந்தை பெரியாரின் வழியில் மனிதர்களாக உரிமைகளுக்காக சுயமரியாதைக்காக தொடர்ந்து போராடுவோம் என்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..