மட்டன் பீஸ் தரவில்லை.. திருமண வீட்டில் அடிதடி..
திருமணம் என்று நடந்தாலே, அங்கு பிரச்சனையும், சில தகராறுகளும் நடப்பது வழக்கம் தான். சில சமயங்களில், அது காவல்நிலையம் வரை சென்று, அபாரதம் செலுத்துவதோடு நின்றுவிடும்.
ஆனால், தற்போது நடந்துள்ள ஒரு திருமணத்தில், சிறிய பிரச்சனை, கைது நடவடிக்கை வரை சென்றுவிட்டது.
அதாவது, தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் உள்ள நவிப்பேட்டையை சேர்ந்த பெண்ணுக்கும், நந்திப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆணுக்கும் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு, இருவீட்டாருக்கும், மட்டன் கறி உணவாக பரிமாறப்பட்டுள்ளது.அப்போது, குறைவான அளவு ஆட்டுக்கறி தங்களுக்கு வழங்கப்பட்டதாக, தகராறு செய்துள்ளனர்.
இந்த தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், இருதரப்பும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அடிதடியை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
இதையடுத்து, அடிதடியால் படுகாயம் அடைந்த 8 பேரை, மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மட்டன் கறியால், ஒரு திருமண வீடு, மிகப்பெரிய களேபரத்தில் சிக்கிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.