பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதிய மம்தா பானர்ஜி!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இரவு நேர பணியில், பெண் மருத்துவர் ஒருவர் இருந்தார்.
அப்போது, அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று, ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு, மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதம் எழுதி சில நாட்கள் ஆன நிலையில், தற்போது மீண்டும் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “எனது கடிதத்திற்கு நீங்கள் பதில் அளிப்பாதது ஏன்” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நிலையை உணராது மத்திய அமைச்சர் எனது கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ளர் என்றும் அவர் கூறியுள்ளார்.