வடபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!! ஒரே நாளில் 50,000 பேர் சாமி தரிசனம்..!!
இன்று ஆடி கிருத்திகை முருகருக்கு மிகவும் உகுந்த நாள் என்பதால்.., முருகரின் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
வடபழனி முருகன் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை என்பதால் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பால் அபிஷேகம் செய்துள்ளனர். பால் அபிஷேகத்தை தொடர்ந்து சில சிறப்பு பூஜைகளும்.., வழிபாடுகளும் , அலங்காரங்களும் அபிஷேகங்களும் செய்துள்ளனர்.
அதில் ஆயிரம் கணக்கான பக்தர்கள் முருகருக்கு பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து பால் காவடி.., பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தியுள்ளனர். இன்னும் சில பக்தர்கள் இன்று அன்னதானம் செய்துள்ளனர்.
எப்பொழுதும் கூட்டமாக இருக்கும் முருகன் கோவிலில் இன்று ஒரே நாளில் மட்டும் 50,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று வடபழனி முருகர் ராஜ அலங்காரத்தில் காட்சி கொடுத்ததால் பழனி சென்றதை போல நித்தம் கிடைத்துள்ளது என பக்தர்கள் கூறினர்.
Discussion about this post