திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள்..!!
காரைக்காலில் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஸ்ரீதர் பாரண்யேஸ்வரர் அனுக்கிரக மூர்த்தியாக அமைந்துள்ளார். இதனால் அவரை ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம்.., கூட்டமாக வந்து வழிபாடு செய்துவிட்டு செல்கின்றனர்.
திருநள்ளாறு கோவிலில் உள்ள குளத்தில் நீராடினால்.., பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் குளத்தில் நீராடி விட்டு, நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்ததாக சொல்லப் படுகிறது. அதிக பக்தர்கள் கூட்டம் இருப்பதால், போலீசார் கண்காணிப்புகாக போட பட்டுள்ளனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.