சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே அனுமதி..!!
ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் புகழ்பெற்ற “சதுரகிரி சுந்தரமகாலிங்கம்” சுவாமி கோவில் உள்ளது இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்..
இந்நிலையில் சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வருகிற செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை, தொடர்ந்து 4 நாட்களுக்கு செல்ல வனத்துறை அனுமதி கொடுத்துள்ளனர்.
புரட்டாசி பவுர்ணமி தினத்தையொட்டி பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கனமழை வெளுத்து வாங்குவதால்.., பவுர்ணமி அன்று மழை பெய்தால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்..
Discussion about this post