9 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்..!! எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?
சென்னை டூ நெல்லை வழித்தடம் உட்பட 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் ரயில் சேவையை மேம்படுத்தவும், அதை விரைவுபடுத்தவும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி அந்த நாட்டின் பல பகுதிகளிலும், பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்கள் வழியாக பயணிக்கும் 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்.
இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள், நெல்லை மதுரை சென்னை வழித்தடத்திலும், உதய்பூர்- ஜெய்ப்பூர், ஐதராபாத் பெங்களூரு, விஜயவாடா சென்னை (ரேணிகுண்டா வழியாக), பாட்னா ஹவுரா, காசர்கோடு திருவனந்தபுரம், ரூர்கேலா புவனேஸ்வர்-பூரி, ராஞ்சி ஹவுரா, ஜாம்நகர் அகமதாபாத் ஆகிய 9 வழித்தடங்களில் செல்ல உள்ளது..
இந்த புதிய ரயில் சேவை மூலம் நெல்லை டூ சென்னை இடையேயான பயண நேரத்தில் 2 மணி நேரமும், ஐதராபாத் டூ பெங்களூரு இடையேயான பயண நேரத்தில் இரண்டரை மணி நேரமும் குறையும் பயணிகள் சீக்கிரம் சென்று விட முடியும்.
வந்தே பாரத் ரயிலில் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சாதாரண ஏசி சேர் கார் கட்டணம் ரூ.1610 (உணவு, ஜிஎஸ்டி உட்பட) ஆகவும், எக்ஸிகியூடிவ் சேர் கார் கட்டணம் ரூ.3005 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..