உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா..? நச் பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் துணை மின் நிலையம் மற்றும் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் கழிவுநீர் வெளியேற்று நிலையம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.
பின்னர் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது குறித்த 355.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு திட்டப்பணிகள் வேலைகள் குறித்து கேட்டறிந்தார். அதன் பின் கொளத்தூர் உள்ள பள்ளி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், பள்ளி சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளியில் 5 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறந்து வைத்தார்
மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மையங்கள், மற்றும் 2 கோடியே 55 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் வகுப்பறைகள், மற்றும் கொளத்தூர் தொகுதியில் 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கப்பட்டு வரும் 10 உயர் மின்கோபுர விளக்குகள் என மொத்தம் 8 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை முன்னேர்ச்சரிக்கை நடவடிக்கை :
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘‘சென்னையில் சிறிதளவு மழை பெய்தாலும் கூட சென்னை நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி விடுகிறது.. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுகிறது. இனி சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குகிறது என ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும். இனி தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி விட்டது. அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு தண்ணீர் தேங்குவது சாத்தியமில்லை..
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அதில் அவர் கூறியதாவது.., “எனது தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்து, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தேன். அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைந்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்..” என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்.
எனது தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்து, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தேன்.
அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைந்து மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.… pic.twitter.com/yMlMcVYQ2e
— M.K.Stalin (@mkstalin) August 5, 2024
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என ஒரு கோரிக்கை வலுத்து வருகிறதே..? அதற்கு உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “வலுத்து வருகிறதே தவிர பழுக்கவில்லை” என பதில் அளித்துள்ளார். முதல்வரின் இந்த பதில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் ஸ்டைல் இருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..