டேஸ்ட்டியான கொள்ளு சட்னி..!! இப்படி செய்து பாருங்க..!!
காலையில் பெரும்பாலும் வீட்டில் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா..? அப்படியானால் வீட்டில் கொள்ளு இருந்தால், அந்த கொள்ளு சட்னி செய்து பாருங்க செம்மையா இருக்கும்…
இந்த சட்னியை அடிக்கடி செய்து சாப்பிட்டால், உடல் வலுவாகும் குறிப்பாக நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், இந்த கொள்ளு சட்னியை உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.
கொள்ளு சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் பார்க்கலாம் வாங்க
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
கொள்ளு – 100 கிராம்
வரமிளகாய் – 4
பூண்டு – 4 பல்
புளி – சிறிய துண்டு
தேங்காய் – 1 கையளவு (நறுக்கியது)
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு 1/4 டீஸ்பூன் வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயத் தூள் – சிறிது
செய்முறை :
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கொள்ளு சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
பிறகு அதில் வரமிளகாய், பூண்டு, புளி, தேங்காய், சீரகம் சேர்த்து நன்கு நிறம் மாறி நல்ல மணம் வரும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து முதலில் நீர் சேர்க்காமல் நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகு சிறிது நீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பை சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான கொள்ளு சட்னி தயார்.
இந்த சமையல் செய்து பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..