ஆடு போட்டி இப்படி செய்து பாருங்க…!
ஆடு போட்டி – 1
சின்ன வெங்காயம் – 100கி
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 4
பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய் – தேவையான அளவு
சோம்பு – தேவையான அளவு
மிளகு, சீரகம் – 2 ஸ்பூன்
தேங்காய் – துருவியது சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஆடு போட்டியை இரண்டு முறைக்கு மேல் நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்று சூடானதும் பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை வருத்துக் கொள்ளவும்.
அத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து இரண்டு வதக்கு வதக்கி இறக்கி விட வேண்டும்.
வதக்கியதை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, சீரகம் சேர்த்து வதக்கி பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்தது வதக்கி தக்காளி போட்டு அதையும் வதக்கவும்.
பின் சுத்தம் செய்த போட்டியை போட்டு 10 நிமிடங்களுக்கு வதக்கவும். போட்டியில் இருந்து நீர் வெளியே வந்ததும் அரைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து மேலும் மஞ்சள்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
குக்கரை மூடி 8 விசில் வரை வேக வைக்கவும், பின் இறக்கி கொத்தமல்லி கறிவேப்பிலை தூவி விடவும்.
அவ்வளவுதான் சுவையான ஆடு போட்டி தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பாடு ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் ரொம்ப ருசியாக இருக்கும்.