டேஸ்டியான சாக்லேட் பிரவுனி இனி நொடியில்..!!
சாக்லேட் என்பது அனைவருக்கும் பிடிக்கும்.சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பிறந்த நாள், தீபாவளி மற்றும் திருமண நாள் என அனைத்து நாட்களிலும் சாக்லேட் போன்ற இனிப்பு பொருட்கள் சாப்பிடுவதும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வதும் வழக்கம்.
சாக்லேட் கொடுப்பதுடன், கேக் வகைகளை கொடுப்பதும் அனைவருக்கும் வழக்கம், நாம் இப்போது சாக்லேட் ப்ரவுனி எப்படி வீட்டில் செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெண்ணெய் – 200 கிராம்
சர்க்கரை – 100 கிராம்
பால் -100 மி.லி
கோகோ பவுடர் – 50 கிராம்
மைதா – 250 கிராம்
சாக்லேட் பார் – 1
செய்முறை :
ஒரு குக்கரை 15 நிமிடம் ஃபிரிஹீட் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் தடவி , சர்க்கரை, பால் சேர்த்து கலக்கவும். பின்பு அதில் மைதா , கோகோ பவுடர் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.
அதில் சாக்லேட் பார் சேர்த்து திரும்பவும் கலக்கி, ஏற்கனவே ஃபிரிஹீட் செய்த குக்கரில் ஒரு ஸ்டாண்ட் வைத்து ஒரு கிண்ணத்தில் பட்டர் பேப்பர் வைத்து, அதில் பிரவுனி கலவையை ஊற்றி 30 நிமிடத்திற்கு விசில் விடாமல், குறைந்த சூட்டில் மூடி வைக்க வேண்டும்.
அடுத்த 30 நிமிடத்தில் சாக்லேட் பிரவுனி ரெடி.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..