டெல்லி மாநகராட்சி தர்தல் கடந்த 4ம் தேதி நிறைவடைந்து இன்று தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேத்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே பாஜக மற்றும் ஆம் ஆத்மீ கட்சிக்கும் நேருக்கு நேரான போட்டி இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் நிலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே மிகவும் பின்னிலை அடைந்தே இருந்தது. ஓர் கட்டத்தில் பாஜக கட்சி 125 வார்டுகளுக்கு மேல் முன்னிலையில் இருந்தது பிறகு அடுத்தடுத்த சுற்றுகளில் பாஜக பின்னிலை அடைந்து ஆம் ஆத்மீ கட்சி முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆம் ஆத்மீ கட்சி டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றிக்கு தேவையான பெரும்பாண்மையான 126 வார்டுகளை ஆம் ஆத்மீ கட்சி கைப்பற்றியது. டெல்லியிலுள்ள மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மீ 126 வார்டுகலிளும் பாஜக 97 வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சி 7 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்றது.