இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு பிறகு அவரது மகன் மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்து நாட்டின் மன்னராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் மன்னர் சார்லஸ் மக்களை சந்தித்த நிலையில் கூட்டத்திலிருந்து அவர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பரபரப்பான சூழலில் இங்கிலாந்த் உள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் இங்கிலாந்து ராணி எலிசபெத் வயது முதிர்வால் உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு பிறகு இங்கிலாந்தின் மன்னராக சார்லஸ் பதவி ஏற்றார்.ராணியின் மறைவின் துக்கத்திலிருந்து வெளியே வரும் அரச குடும்பத்தினர் மக்களை சந்தித்து வருகின்றனர். மேலும் மன்னராக பதவியேற்றுள்ள சார்லசுக்கு இங்கிலாந்து பொதுமக்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மன்னராக பதவியேற்ற பின் முதன்முறையாக மக்களை சந்தித்து அவர்களிடம் உரையாடிய போது, கூட்டத்திலிருந்து எதோ ஒரு திசையில் ஒரு பொருள் மன்னரை நோக்கி வந்து கீழே விழுந்து உடைந்தது அது என்னவென்று பார்ப்பதற்குள் மீண்டும் அதே போருள் தொடர்ந்து மன்னரை நோக்கி வீசப்பட்டது. சிறிது நேரம் கழித்து பார்க்கையில் அழுகிய முட்டைகளை கொண்டு மன்னரை புறக்கணித்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த சம்பவத்தில் நீங்கள் எங்கள் மன்னர் அல்ல என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. சூழ்நிலை மோசமான கட்டத்தை எட்டயத்தால் அங்கிருந்து மன்னர் அரண்மனைக்கு விரைவாக அழைத்து செல்லப்பட்டார். இது போன்று ஏற்கனவே ஒரு முறை நடந்துள்ளது. இந்த சம்பத்தில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.மன்னராக பொறுப்பேற்ற பிறகு மக்களை சந்திக்க சென்ற இரு முறையும் மன்னரை புறக்கணித்து அவர் மீது முட்டைகளை கொண்டு எரிந்து எதிர்ப்பு தெரிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.