சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் சந்தித்து பேசினர்.
ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்திற்கு ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழுமையான அதிகாரம் உள்ளது.
அன்றாட நிர்வாகங்கள் அனைத்தையும் மேற்கொள்ள துணை நிலை ஆளுநரை விட முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படிதான் செயல்பட வேண்டும். அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்’ என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில் தீர்ப்பளித்தனர்.
தேசியத் தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சில நாட்களுக்கு முன் பிறப்பித்தார். மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு உள்ளதாகவும், டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக கூறி வரும் மத்திய அரசு, அதற்கேற்ப அவசர சட்டம் ஒன்றையும் பிறப்பித்தது. இதற்கு எதிராக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை கோரி வருகிறார்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது மாநில சுயாட்சி உரிமைகள், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எதிர்கொள்வது குறித்தும் , தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனைகள், டெல்லியில் நிலவும் துணைநிலை ஆளுநரின் அதிகாரம் மற்றும் உள்துறை அமைச்சரின் அதிகாரம் குறித்தும் அந்த மாநில உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை குறித்தும் அதற்கு எதிராக பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை குறித்து தங்களின் ஆதரவை கேட்கும் வகையிலும் தேசிய அரசியலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது குறித்து இதில் பேசப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post