மாமியாரை கொலை செய்வதற்காக ஆண் வேடமிட்ட மருமகள்..!! போலீசில் சிக்கியது எப்படி..?
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வடுகன் பட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகவேல் மற்றும் சீதாராமலட்சுமி என்பவருக்கு, ராமசாமி என்ற ஒரு மகனும் , மகளும் இருக்கிறார்கள். பஞ்சாயத்து தலைவரான சண்முகவேல் 6 வருடங்களுக்கு முன்பு மகன் ராமசாமிக்கு, மஹாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்.
இப்போது ராமசாமி மற்றும் மஹாலட்சுமி தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் திருமணம் ஆன நாளில் இருந்தே மஹாலட்சுமி மாமியாரிடம் கொடுமை அனுபவித்ததாக கூறப் படுகிறது.
இவர்களின் பிரச்சனையை தீர்க்க முடிவெடுத்த ராமசாமி.., தனிக் குடுத்தனம் செல்ல முடிவெடுத்துள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த சீதாராமலட்சுமி, வீட்டிற்கு பின் புறம் ஒரு வீடு கட்டிக்குடுத்து கண் பார்வையில் இருக்கும் படி செய்துள்ளார்.
தனியே சென்றும்.., மாமியாரை கொடுமையை அனுபவித்துள்ளார் மஹாலட்சுமி. இவர் இருந்தால் தானே இந்த பிரச்சனை, இல்லை என்றால் எந்த வித பிரச்னையும் இல்லையே என நினைத்த மஹாலட்சுமி. மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
வீட்டில் அனைவரும் வெளியே சென்றபோது தனியே உறங்கி கொண்டிருந்த.., சீதா ராமலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்ட , மஹாலட்சுமி கணவரின் பேண்ட், சட்டை மற்றும் ஹெல்மட் போட்டுக் கொண்டு ஒரு இரும்பு கம்பியை எடுத்து சீதா ராமலட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதை மர்ம நபர்கள் செய்யததை போல காட்ட வேண்டும் என நினைத்த.., மஹாலட்சுமி. சீதா ராமலட்சுமியின் கழுத்தில் இருந்து 5 சவரன் நகையை பறித்து சென்றுள்ளார்.
வீடு திரும்பிய சண்முகவேல் குடும்பத்தினர், ரத்த வெள்ளத்தில் கடந்த சீதாவை மீட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். இருந்து சிகிச்சை பலன் இன்றி அவர் உயிர் இழந்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வீட்டிற்கு வெளியே இருந்த சிசிடிவி காட்சி ஆய்வு செய்தனர். சண்முகவேல் வீட்டிற்கு வந்த மர்ம திருடன். ஏன் மற்ற சிசிடிவி காட்சியில் பதிவாக வில்லை. ஹெல்மட் அணிந்துகொண்டு வந்திருக்கிறான். பைக் சென்றதாற்கான அடையாளமே இல்லை என சந்தேகித்த போலீசார்.
மீண்டும் சிசிடிவி யை ஆய்வு செய்த போது, மஹாலட்சுமி போல இருந்ததால், அவரிடம் சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர் தான் இப்படி கொலை செய்தார் என்று, ஒப்புக்கொண்டார்.
Discussion about this post