உங்களுக்கும் அழகான புருவம் வேண்டுமா..? இதை ட்ரை பண்ணுங்க..!
பெண்களின் அழகிற்கு புருவங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய புருவங்களின் அழகை எப்படி பராமரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
புருவங்களின் வடிவத்தை அறிதல்:
உங்களின் முகத்திற்கு எந்த வடிவிலான புருவங்கள் அழகாக இருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டு அதற்கேற்றவாறு புருவங்களை வடிவமைக்க வேண்டும். வட்டமான முகத்திற்கு வளைவான மற்றும் கோண வடிவிலான புருவங்கள் பொருந்தும். இதயம் வடிவிலான முகத்திற்கு வட்டமான புருவங்கள் நன்றாக இருக்கும். ஓவல் வடிவிலான முகத்திற்கு இயற்கையாக வளைந்த புருவங்கள் பொருத்தமாக இருக்கும்.
புருவங்களின் முடியை கவனமாக பிடுங்குதல்:
புருவங்களை வடிவமைக்கும்போது அதன் முடிகளை பிடுங்கும்போது கவனமாக பிடிங்குவது மிகவும் முக்கியம். முடியை அதிகமாக பிடிங்குவதினால் அழகற்ற புருவ தோற்றம் உருவாகும். புருவங்களை சுற்றியுள்ள அதிகமான முடியை மட்டுமே இயற்கையான வெளிச்சத்தில் கவனித்து பிடுங்க வேண்டும்.
நேர்த்தியான புருவத்திற்கு ட்ரிம் செய்தல்:
நல்ல வடிவத்தில் இருக்கும் அழகான புருவங்கள் கூட நீளமான முடிகளை கொண்டிருக்கும், அத்தகைய புருவங்களை ட்ரிம் செய்வது ரொம்ப முக்கியம்.
புருவங்களை நிரப்புதல்:
புருவங்களுக்கு இடையே இருக்கும் அடர்த்தி குறைவு முகத்திற்கு அழகை தருவதில் குறைகிறது. இதற்கு மாற்றாக இயற்கையான புருவங்களுக்கு ஏற்ற நிறத்தில் இயற்கை பூச்சுகளை கொண்டு புருவங்களின் காலி இடங்களில் நிரப்புவதால் அழகான புருவம் கிடைக்கும்.
புருவ ஜெல் பயன்படுத்துதல்:
புருவங்களை நிரப்பும்போது புருவ நிறத்திற்கு ஏற்றவாறு இயற்கை நிற புருவ ஜெல்லை வைத்து நிரப்பும்போது இயற்கையான புருவ தோற்றம் கிடைக்கும்.
மேலே சொன்ன அனைத்து குறிப்புகளையும் பயன்படுத்தும்போது உங்களின் புருவங்களின் அழகையும் கூட்டலாம்.