சென்னை கனமழை அப்டேட்..!! புயல் எச்சரிக்கை..!!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாக்கியுள்ள ஃபெங்கல் (Fengal) ஃபெஞ்சல் புயல் தற்போது வழுப்பெற்று உள்ளது
பெஞ்சல் புயலானது காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவு கரையை கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கும்போது 60 கிலோமீட்டர் முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..
தமிழகத்தின் குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புதுச்சேரி இடையே தென்கிழக்கில் 140 கிமீ தொலைவில் பெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகருவதால் பெஞ்சல் புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..
இந்த பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் சர்வீஸ் சாலை மூடப்பட்டுள்ளது. மற்றும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.. சென்னை தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, வியாசார்பாடி, கொருக்குப்பேட்டை பகுதிகளில் 9செ.மீ மழை பதிவாகியுள்ளது..
தியாகராய நகர், ஆழ்வார் பேட், தேனாம்பேட்டை, ராயாப்பேட்டை பகுதிகளில் 8செ.மீ கனமழை பதிவாக்கியுள்ளது..
மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..