Covid-19 Live Updates in India 2025
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 4,000-த்தை நெருங்கியுள்ளது. கொரோனா வைரஸால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் உருமாறிய கொரொனா வைரஸ்களின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. Covid-19 Live Updates in India 2025
மத்திய சுகாதாரத் துறை அமைச்சக தரவுகளின் படி, தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3961- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஜனவரி 1-ந் தேதி முதல் தற்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துவருகிறது.
இந்தியாவிலேயே கேரளாவில்தான் மிக அதிகமான கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1,400 ஆக உள்ளது. அடுத்ததாக மகாராஷ்டிராவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 485 ஆக பதிவாகி உள்ளது.
தலைநகர் டெல்லியில் உருமாறிய கொரோனா வைரஸ் NB.1.8.1, LF.7 பாதிப்பு அதிகமாக உள்ளது. டெல்லியில் கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 436ஆக உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை கொரோனா ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 199; உத்தரப்பிரதேசத்தில் 149 ஆக பதிவாகி இருக்கிறது. சிக்கிமில் மிக குறைவாக 3 கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் மட்டும் பதிவாகி உள்ளன.
இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முக கவசம் உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மாநில அரசுகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளன.