தொடரும் என்கவுண்டர்..!! அதரடி ஆக்ஷனில் தமிழ்நாடு போலிஸ்..!! பல்வால் கொள்ளையர்களுக்கு ஸ்கெட்ச்…!!
எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம்களை மட்டும் குறிவைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற பல்வால் கொள்ளை கும்பலை நாமக்கல்லில் தமிழக போலீசார் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்..
நாமக்கல் மாவட்டம் அடுத்த குமாரபாளையம் அருகேயுள்ள செக்போஸ்டில் இன்று அதிகாலை ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று இரண்டு இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.. பின்னர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்…
தகவலின் பேரில் காவலர்கள் அந்த கண்டெய்னர் லாரியை சேசிங் செய்து வெப்படை என்ற இடத்தில் மடக்கி பிடித்து டிரைவர் ஜூமான் உட்பட 5 பேரை விசாரணை பேரில் காவல்நிலையம் அழைத்து வந்தனர்.. அப்போது காரும் பறிமுதல் செய்யபட்டு
காவல் நிலையத்திற்கு எடுது்து வரப்பட்டது.. அப்போது கண்டெய்னரில் இருந்து சத்தம் வர தொடங்கியது.. அதன் பின்னர் தோப்புக்காடு பகுதியில் லாரியை நிறுத்தி பார்த்த போது கண்டெய்னர் உள்ளே வெள்ளை நிறத்தில் ஒரு காரும் இரண்டு பெரும் இருந்துள்ளனர்..
அதில் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி சென்றுள்ளார்., மற்றொருவர் கைது செய்யப்பட்ட நிலையில் டிரைவர் ஜூமான் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றுள்ளனர் இதனால் காவலர்கள் அவர்களை சுட்டு பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.. அதில்
ஜூமான் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். அஷ்ரூ என்பவரது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது . மொத்தம் 7 பேர் கைதான நிலையில் ஜூமான் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர். மற்ற 6 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போதே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அதாவது., போலீஸில் பிடிபட்ட இந்த கும்பல் கேரளா மாநிலம் திரிச்சூர் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிம்களில் பணத்தை கொள்ளையடித்து அதன் பின் மாப்ரனம் பிளாக் சந்திப்பு, நாய்க்கனல் சோர்னூர் ரோடு, கொலாழி பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நுழைந்த கும்பல் கேமராவை உடைத்து 68 லட்சத்தை கொள்ளையடித்து கொண்டு கண்டெய்னர் லாரியில் ஏறி தமிழகத்துக்கு தப்பி வந்தது தெரியவந்தது.
இவர்களிடம் நடத்தபட்ட தீவிர விசாரணையில் இவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் ஹரியானாவின் பல்வால் மற்றும் நூ மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அதையடுத்து கார், கண்டெய்னர் லாரி, மற்றும் அதில் இருந்த பணம் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.., பல வருடங்களாக நூதன முறையில் பணம் கொள்ளையடித்து வந்த கும்பலில் முக்கிய குற்றவாளியை காவலர்கள் என்கவுண்டர் செய்து இருப்பது பிற ரவுடிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அஷ்ரூ குண்டுகாயமடைந்து நாமக்கல்லில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..