தொடரும் போதைப்பொருள் விற்பனை..!! போலீஸ் அதிரடி..!!
திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து காவல் துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர்.லட்சுமி உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து போதை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்த சிவன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 123 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம்..வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் – பள்ளிப்பட்டு கூட்டுச்சாலையில், மாவட்ட சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான சுகாதார துறையினர் மற்றும் காவல்துறையினர் கடைகளில் போதைப்பொருட்கள் விற்கப்படுகிறதா என ஆய்வு மேற்க்கொண்டனர்,அப்பொழுது, அப்பகுதியில் சாதிக் என்பவரின் கடையில் சோதனை செய்த போது சலவை இயந்திரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கிலோ ஏடையிலான தடை போதைப் பொருட்களை சுகாதார துறையினர் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்து, கடைக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற கோரி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி மாவட்ட செயலாளர் பாபு தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், கோவில்பட்டி இளையரச நேந்தல் ரோட்டில் அமைந்துள்ள ரயில்வே சுரங்க பாதையின் இருபுறமும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளைப் போக்கும் விதமாக உடனடியாக அணுகு சாலை அமைத்து தர வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இவ் ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..