உங்கள் ஊர் செய்திகள்..! உங்கள் பார்வைக்காக..! களத்தில் மதிமுகம்..!!
திருப்பூர் ஊத்துக்குளி சாலை மன்னரைப் பகுதியில் அவ்வப்பொழுது பார்சல் ஏற்றி வரும் லாரிகள் மூட்டைகளை இறக்குவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது லாரியில் இருந்து ஆறு மூட்டைகள் வழியில் இறக்கப்பட்டு மாற்று ஆட்டோவில் ஏற்றப்பட்டது தெரியவந்தது. உடனடியாக லாரி மற்றும் ஆட்டோவை மடக்கி பிடித்த போலீசார் பண்டல்களை பிரித்து சோதனை செய்தபோது அதில் 400 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து லாரி டிரைவர் அழகுராஜா மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சதீஷ் மற்றும் முருகன் என மூன்று பேரை கைது செய்த போலீசார் 425 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகவும், தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தரும் சிறப்பு கொண்ட ஸ்தலமாகவும் விளங்கும் மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் மாதந்தோறும் ஒரு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ஆடி மாதத்தில் மட்டும் ஆடி கார்த்திகை, ஆடி பவுர்ணமி, ஆடிபூரம், ஆடி வெள்ளி விளக்கு பூஜை என விஷேசங்கள் நடைபெறுவது இம்மாதத்தின் சிறப்பாகும். இந்நிலையில் ஆவணி மாத தொடக்கம் மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவில் மண்டபத்தில் 1008 திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையடுத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் குத்துவிளக்குகளில் தீபம் ஏற்றி தீபத்திற்கு குங்குமத்தினால் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் இருப்பதால் தினம் தோறும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தடையை மீறி அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து வருகின்றனர்.
இதனால் சில உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் நீர் வரத்து குறைந்து, சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்று அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படும் வரை பாதுகாப்பு பணியில் காவல்துறையினரை ஈடுபடுத்தப்பட்டு , இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், இல்லையென்றால் மேலும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு :
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் பெரும் பேர் கண்டிகை ஊராட்சியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம்,மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம் என சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சத்தான உணவுகள் ஒன்பது குறித்த உணவு விளக்கம் குறித்த செயல்முறை செய்து காண்பிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 750க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர்
தொழில் பாதுகாப்பு படை பயிற்சி :
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்து தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 49 ஆவது பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் 739 வீரர்கள் இப்பயிற்சியை நிறைவு செய்தனர் இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ள பாராளுமன்றம் நீதிமன்றங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
மேலும் தலைமை அதிகாரி சரவணன் பேசுகையில் நவீன எதிர்ப்புகளை எவ்வாறு சமாளிப்பது அதை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பல்வேறு பயிற்சிகளை பெற்றிருப்பதால் சிறப்புடன் செயல்படுவதாகவும் இந்த பயிற்சியில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பயிற்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பெண்கள் தேசப்பற்று மிகுந்தவர்கள் எனவும் அவர் பேசினார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..