“திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாள் முருகா..” அலைமோதும் பக்தர் கூட்டம்..!!
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை – ஏராளமான பெண்கள் பங்கேற்பு.
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத தொடக்கம் முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. பூஜையில் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்று தீபத்திற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகவும், தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தரும் சிறப்பு கொண்ட ஸ்தலமாகவும் விளங்கும்.. மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் மாதந்தோறும் ஒரு திருவிழா நடைபெற்று வருகிறது.
இதில் ஆடி மாதத்தில் மட்டும் ஆடி கார்த்திகை, ஆடி பவுர்ணமி, ஆடிபூரம், ஆடி வெள்ளி விளக்கு பூஜை என விஷேசங்கள் நடைபெறுவது இம்மாதத்தின் சிறப்பாகும். இந்நிலையில் ஆவணி மாத தொடக்கம் மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவில் மண்டபத்தில் 1008 திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கோவில் சிவாச்சாரியார்கள் தீபத்திற்கான சிறப்பு பூஜைகளை செய்து அலங்கரிக்கப்பட்டு இருந்த கோவில் திருவாட்சி மண்டபத்தில் மகா குத்து விளக்கில் தீபம் ஏற்றினர். இதனையடுத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் குத்துவிளக்குகளில் தீபம் ஏற்றி தீபத்திற்கு குங்குமத்தினால் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்..
பூஜை ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று கடைசி ஆடி ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு இன்று காலை முருகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.. அதில் முருகர் ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார் இன்று காலை 5மணிக்கு நடத்தப்பட்ட முதல் தரிசனத்தின் ஆண்டி வேடத்திலும் இரண்டாம் அலங்காரத்தில் ராஜ வேடத்திலும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்..
இன்று காலை முதல் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.., மேலும் தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து இருப்பதால் பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..