காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், கே.என்.திரிபாதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான மல்லிகார்ஜூன், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டேன். நடுநிலையாக வகிப்பேன் என சோனியா கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, மற்றொரு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். இதற்கான வேட்பு மனுக்களை பெற்று கொண்டார். தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக திக்விஜய் சிங் அறிவித்தார். வேட்புமனு தாக்கல் இந்நிலையில் தேர்தல் நடத்தும் குழுவினரிடம், சசிதரூர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பிற்பகல் 3 மணியளவில், வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், இருவரை தவிர வேறு யாரும் களத்தில் இல்லை. இதனால், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் இடையே போட்டி உறுதியாகி உள்ளது. அக்டோபர் 17 ல் ஓட்டுப்பதிவு நடக்கும் நிலையில் அக்டோபர் 19 ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.