இளைஞர் கொடுத்த காதல் டார்ச்சரால் மனமுடைந்து கல்லூரி மாணவி தற்கொலை..!!
கல்லூரி மாணவிக்கு காதல் டார்ச்சர் கொடுத்த இளைஞர் கைது, மனமுடைந்த கல்லூரி மாணவி லைசால் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண். குடியாத்தம் அடுத்த காந்தி நகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார்.
இவரை குடியாத்தம் அம்பாபுரம் பகுதியை சேர்ந்த சந்துரு (23 ) என்பவர், கடந்த சில மாதங்களாக தன்னை காதலிக்குமாறு மாணவிக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். ஆனால் அதற்கு கல்லூரி மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே குடியாத்தம் நான்கு முனை சந்திப்பு ரோடு வழியாக, மாணவி கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு , சென்று கொண்டிருக்கும் போது மாணவியை சந்துரு வழிமறித்து காதலிக்குமாறு வற்புறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது மாணவியின் கன்னத்தில் சந்துரு அறைந்ததாக கூறப்படுகிறது.
இதில் மன வேதனை அடைந்த மாணவி மாலை வீட்டிற்கு வந்ததும் லைசால் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த மாணவியின் குடும்பத்தினர், மாணவியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பெயரில் அங்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து மாணவியிடம் விசாரணை செய்துள்ளனர்.
அதில் மாணவி நடந்தவற்றை போலீசாரிடம் கூற , குடியாத்தம் நகர் போலீசார் சந்துருவை கைது செய்து, மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லவ் டார்ச்சர் செய்து மாணவியை தற்கொலைக்கு தூண்ட வைத்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவி இன்று வரை தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதகாவும் மருத்துவர்கள் மற்றும் மாணவியின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய குடியாத்தம் போலீசார், மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பது தவறான செயல், எந்த பிரச்சனையாக இருந்தாலும் முதலில் வீட்டில் உள்ளவர்களிடம் வந்து சொல்லுங்கள்.., பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என்று நீங்கள் பயந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்.
Discussion about this post