ட்விட்டருக்கு போட்டியாக வரும் புதிய ஆப்..!! இன்ஸ்டா பயனர்கள் கொடுத்த ட்விஸ்ட்..!!
சமூக வலைத்தளங்கள் பல இருந்தாலும் ஒன்றுக்கு போட்டியாக ஒன்று வந்து கொண்டு இருக்கும், சமூக வலைத்தளங்களில் அவற்றின் பிரத்தியேகமான மொபைல் செயலிகளும் பல வசதிகளுடன் புதிது புதிதாக வந்து கொண்டு தான் இருக்கிறது.
எவ்வளவு தான் புதிய செயலிகள் வந்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், போன்ற சமூக செயலிகளுக்கு சில சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சில காலங்களுக்கு முன்பு ஆர்குட் போன்ற தளங்கள் காணாமல் போய் விட்டன, அதைபோல் லிங்க்டு இன் போன்ற தளங்கள் செயலில் இல்லாமல் போய் விட்டன, இருப்பினும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், போன்ற சமூக வலைத்தளங்கள் புது புது அப்டேட்களுடன் வருவதால் பயனாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
பல அப்டேட் வந்தாலும் அன்று முதல் இன்று வரை என்றும் மாறாமல் இருப்பது ட்விட்டர்.., இந்த ட்விட்டரை பல பிரபலங்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சாமானிய மக்கள் என பலரும் இன்று வரை பயன் படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
நாம் சொல்ல நினைக்கும் சமூக கருத்துக்களை ட்விட்டர் மூலம் குறுந்தகவலாக பதிவேற்ற முடியும்.., இந்த சிறப்பு அம்சம் ட்விட்டருக்கு இருப்பதால் ட்விட்டருக்கு போட்டியாக வந்த பல தளங்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது.
இதற்கு முன் வந்த செயலிகளே போட்டி போட முடியாமல் சென்ற பொழுது, தற்போது ஒரு செயலி களம் இறங்கியுள்ளது.., இந்த புதிய செயலியின் பெயர் “திரட்ஸ்” (Threadas, an instagram app ). ஃபேஸ்புக்கின் நிறுவனமான மெட்டா நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.
இந்த திராட்ஸ் நிறுவனத்தில் 500 கேரக்டர்ஸ் களில் போஸ்ட்களை பதிவிடலாம், இதை பயனாளர்கள் மிக எளிதாக பயன் படுத்தும் வகையிலும், கையாளுவதற்ககு ஏற்றவாறும் இருக்கும் எனவும் மார்க் ஜூகர் பெர்க் ஃபேஸ்புக்கின் தலைமை நிருவாகி அறிவித்துள்ளார்,.
இந்த செயலியை வெளியிட்ட சில நிமிடத்திலேயே 10மில்லியன் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ட்விட்டர் தளத்தை எலான் மாஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்து வருவதாகவும்.., அது பயனாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும் எனவும்
புதிய செயலியான “திரட்ஸ்” உலகில் உள்ள பல நாடுகளில் ஒரே நாளில் 10 மில்லியன் பயனாளர்களை கவரந்தத்துடன்.., ட்விட்டரின் வாடிக்கையாளர்களை பயன் படுத்த முடியாத வகையில் செய்துள்ளது.
இதை ஸ்மார்ட் போன்களிலேயே பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும், திரட்ஸ் செயலியில் இருந்து இன்ஸ்ட்டாகிராம் தளத்திற்கு நேரடியாக போஸ்டர்களை ஷேர் செய்துக்கொள்ள முடியும், இந்த திரட்ஸ் ஆப் குறித்து இன்ஸ்டாகிராமில் நோட்டிபிகேஷன் வருவதால், இன்ஸ்டாகிராம் பயனாளர்களும் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
ஒரு சிலர் திரட்ஸ் பயன் படுத்த வேண்டும் என்றால் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் டெலீட் செய்ய வேண்டும் என்று திரட்ஸ் நிறுவனம் செய்துள்ளது.., எனவே இன்ஸ்டா பயனாளர்கள் பலரும் இதை பயன் படுத்த மறுத்துள்ளனர்.
Discussion about this post