குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் பர்ஃபி செய்யலாமா.!!
நம்ம வீட்டில் இருக்கும் பிஸ்கட் வைத்து சாக்லேட் பர்ஃபி செய்யலாம். இதை செய்வது ரொம்ப சுலபம், ஏன் அரைமணிநேரத்தில் குழந்தைகளே இதை செய்து முடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பிஸ்கெட்- ஒரு பாக்கெட்
கோ கோ பவுடர்- அரை கப்
பொடித்த நட்ஸ்- ஒரு கப்
வெண்ணெய்- 50 கிராம்
சர்க்கரை- அரை கப்
சாக்லேட் பர்ஃபி தயாரிப்பதற்கு கிரீம் இல்லாத பிஸ்கட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து அதில் உள்ள பிஸ்கட்டை சிறிது சிறிது துண்டுகளாக உடைத்துக் கொள்ள வேண்டும். பிஸ்கட்டை மிக்ஸியில் போட்டு அரைத்துவிடக் கூடாது.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு அதில் பொடித்து வைத்துள்ள சர்க்கரை, கோ கோ பவுடர் மற்றும் கொஞ்சம் நீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இது கெட்டியாகும் சமையத்தில் எடுத்து வைத்துள்ள வெண்ணெய் சேர்க்க வேண்டும்.
வெண்ணெய் கலந்தவுடன் இக்கலவை இன்னும் கெட்டியாக மாறும் சமையத்தில் ஏற்க்கனவே உடைத்து வைத்துள்ள பிஸ்கட் கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
பின் வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் இந்த கலவையை கொட்டி சமமாக சமப்படுத்தி ஃப்ரிட்ஜில் 3 மணி நேரம் வைத்திருந்து பின் சிறிய துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)