“குழந்தை வரம் அருளும்.. குழந்தை வடிவேலன்.. ” இத்திருத்தளத்திற்கு சென்றால் நிகழும் அதிசயம்..!!
குழந்தை என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்.. காரணம் குழந்தையின் சிரிப்பு, குழந்தையின் குறும்பு என அனைத்தும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.. நமக்கு கஷ்டங்கள் வரும் நேரத்திலே அவர்களோடு.. சிறிது நேரம் செலவழித்தாலே.. கஷ்டங்கள் நீங்கி.. மனதில் சந்தோஷத்தை கொடுக்கும்.
ஆனால்.. அப்படிபட்ட குழந்தைகள்.. வரம் ஒரு சிலருக்க கிடைப்பதில்லை.. அந்த குழந்தை வரம் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா..? அப்போ ஒருமுறை இக்கோவிலுக்கு சென்று வந்தால் போதும். குழந்தை வரம் கிடைத்து விடும்..
குழந்தை வரம் அருளும் முருகன்..
ஆறுப்படை வீடுகளை கொண்ட முருக பெருமானுக்கு.. ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதே நேரம் முருகப்பெருமானுக்கு என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது “குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்”…
முருகப்பெருமான் பழநி மலையில் இருந்து தாண்டிக் குதித்து வந்த மலைதான் கொடைக்கானலில் உள்ள இந்த தாண்டிக்குடி.. குழந்தை வேலவனாக காட்சி கொடுக்கும் தாண்டிக்குடி முருகன் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றவர் இக்கோவில் சிறப்பு பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் இதில் பார்க்கலாம்..
தாண்டிக்குடி வரலாறு :
ஒரு முறை அகத்தியரின் சீடனாக இருந்த இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என்று இரு மலைகளை சுமந்து வந்துள்ளார். அதில் ஒன்று தான் “பழனிமலை”. மற்றொன்று கொடைக்கானலில் உள்ள தாண்டிக்குடி மலை…
ஒருமுறை முருகப்பெருமான் இடும்பனிடம், பழநி மலையில் இருந்து இந்த மலைக்கு தான் எப்படி வருவது..? எனக்கேட்டுள்ளார்.. அதற்கு இடும்பன், “தாண்டிக்குதித்து செல் என இடும்பன் கூறியிருக்கிறார்…
அதனை கேட்ட முருகரும் தாண்டிக் குதித்துள்ளார்.. இதனால் அந்த மலைக்கு “தாண்டிக்குதி” என சொல்லப்பட்டு. காலப்போக்கில் அது மக்களால் “தாண்டிக்குடியானது”..
இங்கே பாலமுருகன் தாண்டிக்குதித்தபோது ஏற்பட்ட பாதச்சுவடுகளை இன்றும் காண முடியும். முருகன் இருக்கும் இடத்தில் அவரின் வாகனமும் இருக்கவேண்டும் என்றதால்..?
அங்குள்ள பாறைகளில் வேல், மயில், சேவல், பாம்பு ஆகியவற்றின் படிமங்கள் இயற்கையாகவே உருவாகியிருப்பதைக் காண முடியும்.
குழந்தை வடிவேலவனாக காட்சி கொடுக்கும் தாண்டிக்குடி முருகப்பெருமானை தரிசனம் செய்தால் குழந்தை வரம் கிடைக்கும்… என்பது ஐதீக உண்மை…
மேலும் நம் வாழ்க்கையில் உள்ள அனைத்து துன்பமும் விலகி எல்லாம் செல்வங்ககும் கிடைக்கும் என்பது ஐதீக உண்மை..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..