“தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை..” குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை..!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பெருமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது.. இன்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், காஞ்சிபுரம், தருமபுரி, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் சென்னையை பொறுத்தவரையில் வடசென்னை பகுதிகளில் இன்று கனமழை வெளுத்து வாங்க காத்திருக்கிறது இன்று அதிகாலை 5:30 மணி முதல் மழை பொழிய தொடங்கியுள்ளது. அதவாது சென்னை சென்ட்ரல், இராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஆகிய வடசென்னை பகுதிகளில் மிதமான மழையுடன் கூடிய காற்றும் வீசி வருகிறது.
அதேபோல்., ஆவடி, அம்பத்தூர், சென்ட்ரல், மயிலாப்பூர், திருவான்மையூர், மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த மழையால் சாலையின் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..