வட்டி பணம் கேட்ட வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த அனிப் முகமது (வயது 47), என்பவரிடம் இருந்து, அதே பகுதியை சேர்ந்த நிஷா (வயது 37) என்பவர் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.
பணத்தை வாங்கிவிட்டு சில மாதங்களாக கொடுக்காமல் நிஷா இழுத்தடித்துள்ளார், கடந்த மாதம் அக்டோபர் 25ம் தேதி அனிப் முகமது, நிஷாவின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளார்.
அதற்கு நிஷா பணத்தை இன்னும் சில நாட்களில் தந்து விடுவதாக கூறியுள்ளார்.., இதை நம்பி அனிப் முகமதும் அங்கிருந்து சென்றுள்ளார்,
கடந்த அக்டோபர் 30ம் தேதி.., நிஷா.. அனிப் முகமதுவிற்கு போன் செய்து பணத்தை திருப்பி தருவதாக கூறி அழைத்துள்ளார்.
பணத்தை பெற வந்த அனிப்பை மர்ம நபர்கள் இருவருடன் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். செய்த கொலையை மறைத்துள்ளார்..,
பின் அனிப்பை காணாத அவரது மனைவி நஸ்ரின் நேற்று காலை அனிப் காணவில்லையென போலீசில் புகார் அளித்துள்ளனர்..
புகாரின் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீசார்.., அனிப் மொபைல் எண்ணை வைத்து ட்ராக் செய்ததில் நிஷாவின் சந்தேகம் எழுந்துள்ளது.
பின் நிஷாவிடம் விசாரணை செய்ததில்.., நிஷாவுடன் சேர்ந்து அப்துல் சித்திக் (வயது 19), காரிமுல்லா (வயது 18) மூன்று பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர்..
பின் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..