முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க பயணம்..!! தலைவர்கள் வாழ்த்து..!!
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவபதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணி அளவில் எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
அமெரிக்காவில் 17 நாட்கள் தங்க இருப்பதாகவும் உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீட்டாளர்களை கொண்டு வருவது இந்த பயணத்தின் நோக்கம் என தெரிவிதுள்ளார்..
இன்று இரவு 10 மணி அளவில் புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின்., நாளை சான்பிரான்சிஸ்கோ சென்று செப்டம்பர் 2ம் தேதி வரை அங்கேயே தங்கியிருந்து ஆகஸ்ட் 28 ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க போவதாக தமிழக தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
முன்னதாக சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த மாநாட்டின் போது, தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வரும்படி முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுப்பதுடன், முக்கிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சரின் இந்த பயணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்..
காங்கிரஸ் கமிட்டி செல்வப்பெருந்தகை :
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து, பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
டிவிஎஸ் நிறுவனர் வேணு சீனிவாசன் :
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. வேணு சீனிவாசன் அவர்கள் தனது மனைவியுடன் சந்தித்து, பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை பேராசிரியர் அன்பழகன் அவர்களின் மகன் திரு. அ.அன்புச்செல்வன் மற்றும் பேரனும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. அ.வெற்றியழகன் ஆகியோர் சந்தித்து, பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..