கட்சி கொடிக்கே அலைக்கழிப்பா..!! விஜய் சொன்ன வார்த்தை..! கட்டுக்குள் வந்த ரசிகர்கள்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி தராமல் தங்களை அலைக்கழிப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்…
கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் காலை அக்கட்சியின் தலைவர் விஜய் கொடியை ஏற்றி வைத்து அறிமுகம் செய்தார்.. இரண்டு சிவப்பு நிறங்களுக்கு, நடுவே மஞ்சள் நிற கொடியில் அதன் நடுவே இரண்டு போர் யானைகளுக்கு, நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பல சிக்கல்கள் எழத் தொடங்கியது. அதாவது தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு வழங்கப்பட்டு, வழக்கும் தொடுக்கப்படும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தெரிவித்தனர்.,
இதுகுறித்து விவகாரம் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நம் கொடியை பறக்க விடுங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன் படி திருப்பூர் பகுதிகளில் கொடிக்கம்பம் அமைத்து கட்சிக் கொடியினை ஏற்றிட காவல்துறையினர் தடை விதிப்பதாகவும் அனுமதி பெற மாநகராட்சி நிர்வாகத்தை அணுகினால் காவல்துறையிடம் அனுமதி பெறுமாறு அனுப்பி விடுவதாகவும், காவல்துறையினரிடம் அணுகினால் மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என தங்களை அலைக்கழிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்கள் கோரிக்கை தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க முடிவெடுத்து , முதல் கட்டமாக மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்திருப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..