ஆதார்கார்டு புதுப்பிச்சிட்டீங்களா..? இல்லைனா உங்களுக்கு..!! கட்டாயமாக்கப்பட்ட ரூல்ஸ்..!!
ஆதார் அட்டை என்பது நாடு முழுவதும் ஒரு அடையாள் அட்டையாக பார்க்கப்படுகிறது. ஆதார் இல்லாமல் எந்த ஒரு செயலையுமே செய்ய முடியாது. போஸ்ட் ஆபீஸ் முதல் மருத்துவமனை வரை பல்வேறு இடங்களில் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. மேலும், KYC சரிபார்ப்பிற்கு தேவைப்படும் முதன்மை ஆவணங்களில் ஆதார் கார்டு தான் முன்னிலையில் உள்ளது.
ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும், ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை தங்களது சமீபத்திய தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
அதன்படி தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, போட்டோ போன்ற விவரங்களை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம் எனவும் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி வரை கட்டணமின்றி புதுப்பித்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
மேலும் செப்டம்பர் 14-க்கு பிறகு சென்றால் கட்டணம் செலுத்தியே புதுப்பிக்க முடியும் என்று கூறியுள்ளது.
-பவானி கார்த்திக்