மக்களுடன் ஸ்டாலின் திட்டம்..!! புதிய திட்டங்களில் அசத்தும் முதலமைச்சர்..!!
அரசின் திட்டங்கள் குறித்த தகவல்கள் “மக்களுடன் ஸ்டாலின்” செயலியில் இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வேலூரில் இன்று தி.மு.க பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் “மக்களுடன் ஸ்டாலின்” என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த செயலியில் தி.மு.க. அரசின் செயல்பாடுகள் மற்றும் ஒவ்வொரு தொகுதியை பற்றிய விரிவான தகவல்கள், அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களும் இந்த செயலியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கள செயல்பாடுகளை இந்த செயலியில் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து ரெயில் மூலம் வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு சென்றடைந்தார். இன்றைய தினம் மேல்மொனவூரில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகளையும் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..