திருப்பூரில் இருந்து வயநாடு சென்ற சப்பாத்திகள்..! தன்னார்வலர்களுக்கு குவியும் பாராட்டு..!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து 5000 சப்பாத்திகள் செய்து அனுப்பிய தன்னார்வலர்கள்
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் தொடர்ந்து பலர்தங்களது வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகிறார்கள் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்பினர் அவர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் அவர்களின் பசியாட்டுவதற்காக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து செங்குந்த முதலியார் அறக்கட்டளை மற்றும் தன்னார்வர்கள் இணைந்து மாலையில் இருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட சப்பாத்திகளை 100க்கும் மேற்பட்டவர்கள் தயார் செய்து தனித்தனி பெட்டிகள் மூலம் பேக் செய்து அத்துடன் அங்கு உள்ளவர்களுக்கு போர்வை, பற்பசை, பிஸ்கட் ,சோப்பு உள்ளிட்ட பொருட்களையும் இணைத்து அனுப்பியுள்ளார்கள்.
இந்த நிகழ்வில் திருப்பூர் கோவை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..