துன்பங்கள் தீர இந்த ஒரு மந்திரம் உச்சரித்தால் போதும்..!!
வியாழக்கிழமை தினங்களில் மகா விஷ்ணுவையும், குறு பகவானையும் இன்றைய நாட்களில் வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் அதுமட்டுமல்ல இந்த மந்திரங்களை உச்சரித்தால் துன்பங்கள் தீரும் என்பது ஐதீகம்..
கடவுளை வணங்குவதற்கு என்று ஒரு கால அவகாசம் உள்ளது.., அதன் அடிப்படையில் வியாழன்கிழமை அன்று மஹாவிஷ்ணு மற்றும் குரு பகவானுக்கு சிறந்த நாளாக கருதப்படுகிறது.
குரு பகவான், ஞானத்தையும், நாம் செய்த பாவங்களை நீக்குபவராகவும், செல்வத்தை அள்ளிக்கொடுப்பவராகவும் பக்தர்களின் துன்பங்களை போக்குபவராகவும் இருக்கிறார். இதனால் கஷ்டங்கள் தீர வேண்டும் என நினைக்கும் பக்தர்கள்.., வியாழக்கிழமையில் மஞ்சள் நிற வஸ்திரம் சாத்தி, மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவார்கள்.
அப்படி செய்தால் நம் கஷ்டங்கள் தீருமாம்..,
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு பிரசோதயாத்
அதிலும் இன்றைய நாளில் மகா விஷ்ணுவிற்கு உரிய விஷ்ணு காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும். அது மன அமைதியை தருவதுடன் வாழ்வில் உள்ள அனைத்து துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம்
ஓம் பிரகஸ்பதயே நமஹ
ஓம் கன் குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரகஷ்பதயே நமஹ..
இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன் உங்களின் மனதில் உள்ள குறைகளை நினைத்துக்கொள்ள வேண்டும்.., ஆனால் மந்திரம் உச்சரிக்கும் போது எந்த விதமான கவலையும் மனதில் இருக்க கூடாது…