ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பையில் இந்தியா அணி அறையுறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்தது. ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் இந்திய அணி மோசமாக தோல்வியை தழுவியது.
இதை தொடர்ந்து ரசிகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக சாடி வருகின்றனர். இதனால் பிசிசிஐ டி20களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.
சொதப்பல்கள்;-
1.தொடக்க ஆட்டக்காரர்கள்
ஒரு அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பு தொடக்க ஆட்டக்காரர்களிடமே உள்ளது. அதை இந்த தொடர் தொடர் முழுவதும் நம் தொடக்க ஆட்டக்காரர்களிடம் காண முடியவில்லை, அதுவே நம் இந்த தொடரிலிருந்து வெளியேற முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பாக முக்கியமான போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்கார்கள் கடந்த சில தொடர்களில் தொடர்ந்து சொற்ப ரங்களுக்கு வெளியேறி வருகின்றனர். இதனால் முக்கியமான போட்டிகளில் இந்தியா நல்ல தொடக்கத்தை பெரும் வாய்ப்பை இழந்து மற்ற வீரர்களுக்கு அழுத்தத்தை அளிக்கிறது. இதனை இம்முறை பிசிசிஐ உடனே கையில் எடுத்து சரியான தீர்வை பெறவேண்டும்.
2. வீரர்களின் வயது
இந்த தொடரில் வீரர்களின் சராசரி வயது 31 ஆகா இருக்கிறது அதாவது இந்த அணியில் முக்கிய வீரர்கள் அனைவரும் 32 வயது அல்லது அதை தாண்டியவர்களாகவே உள்ளது.ரோஹித்,தினேஷ் கார்த்திக்
புவனேஸ்வர்,சமி,விராட் கோலி என்று அனைவரும் 30 வயதை தாண்டியவர்கள் இதில் விராட் கோலியை தவிர மற்றவர்கள் பெரிதாக தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் வீரர்களின் ஆடும் திறன் சிறப்பாக இல்லை. பல முன்னாள் கிரிக்கெட்டர்களும் இதேயே குறியாக கூறி வருகின்றனர் இனிமேல் டி20 போட்டிகளில் இவர்கள் நீடிப்பது சற்று கடினமாகியுள்ளது.
3. பந்துவீச்சு
அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சு மிக மோசமாக இருந்தது ஓரூ விக்கெட் கூட எடுக்காமல் படுதோல்வி அடைந்தனர். தொடக்க பந்துவீச்சாளர் புவனேஸ்வருக்கு பந்து ஸ்விங் ஆகவே இல்லை அதை தொடர்ந்து யாரும் சரியான இடத்தில் பந்தை வீசவில்லை இதுவே அந்த போட்டியில் தோல்வியடைய மிக மிக முக்கிய காரணமாக அமைந்தது. அதிலும் லெக் ஸ்பின்னர் இல்லாமல் ஆட்டத்திற்கு சென்றது பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இது போன்ற சொதப்பல்களே இந்தியா வை அரையிறுதியில் தோல்வி பெற வைத்தது. இதன் பிறகு பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது பல முக்கிய சீனியர் வீரர்கள் டி20 அணியில் இருந்து விடுவிக்க வாய்ப்பு உள்ளதாகவும், கேப்டன் மாற்றங்கள் கூட வாய்ப்பு இருப்பதாகவும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.