உதவி பண்ணலாமா..? பண்ணக்கூடாதா..? இதை படிச்சுட்டு நீங்களே சொல்லுங்க..
கடிகார முள்ள விட வேகமா பரபரப்பா போயிட்டு இருக்கவங்களுக்கு மத்தியில நானும் ஒரு ஆளு.. காலையில வேக வேகமா வேலைக்கு கிளம்பி பஸ் ஏற போன ஒரு டிப்போல பஸ்ஸே இல்ல.. தினமும் இதே தொல்லையா போச்சுன்னு நினைச்சுட்டு இருக்க அப்போ..
பின்னாடி இருந்து சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு காசு இருந்தா குடுங்க சொல்லி ஒரு குரல்.. யாருனு பார்த்த ஒரு வயதான பெரியவர் ஒருவர். சரி பசி என்று காசு கேட்டவுடன் இல்லை என்று சொல்ல மனம் வராமல்.. காசு தர மாட்டேன் அதற்கு பதிலாக சாப்பிட ஏதாவது வாங்கி தரவா என்று கேட்டேன்.
அதற்கு அந்த பெரியவரும் சரி என்று சொன்னார்.. டிபன் மற்றும் தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுத்து விட்டு.. நான் செல்ல வேண்டிய பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். அதே வயதனவர், மற்றவர்களிடம் சென்று நான் வெளியூர் செல்ல வேண்டும்., குளித்து விட்டு வருவதற்குள் என் பொருள்களை திருடி சென்று விட்டார்கள். காவலரிடம் புகார் அளித்தேன் ஆனால் அவர் எனக்கு உதவவில்லை நீங்கள் காசு கொடுக்கிறீர்களா என்று கேட்டார்.
அதற்கு அந்த நபரும் காசு கொடுத்தார்.. காசை வாங்கி கொண்டு நான் ஏறிய அதே பேருந்தில் அந்த வயதானவரும் ஏறினார்.., பின் நான் இறங்கிய பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அந்த பெரியவர் வேகமாக நடந்து சென்று..” ஒயின் ஷாப்பின்” உள்ளே நுழைந்தார்..
பார்த்தவுடன் எனக்கு அவரை என்ன சொல்லுவது என்று தெரியவில்லை., இதுபோல் பல பொய்களை சொல்லி ஏமாற்றினால்.. மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் போய்விடும்.. என்பது மட்டுமே என் மனதில்.. நின்றது.
மேலும் இதுபோன்ற பல நிஜக்கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post