16 வயதினிலே திரைபடத்தில் இதை கவனித்தீர்களா..?
16 வயதினிலே..,1977இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், கவுண்டமணி, நடிகை ஸ்ரீதேவி, இசைஞானி இளையராஜா என பல ஜாம்பவான்கள் பணிபுரிந்த படம் 16 வயதினிலே.
வளர்ந்து வரும் இளம் கதாநாயகனாக கமலஹாசன் பல படங்களில் கிட்டார் வைத்துக்கொண்டு ஸ்டைலிஷ் லுக்கில் பெண்களுடன் ரொமான்டிக் பாடல்களில் ஆடிக்கொண்டிருந்த போது,
கோமணம் கட்டி நடிக்க வைத்தார் பாரதிராஜா
காதல் இளவரசனாக வலம் வந்த கமல், இப்படத்தில், எந்நேரமும் வெற்றிலையை மெல்லும் வாய், மூக்குத்தி, விந்தி விந்தி நடக்கும் நடை, கோமண உடை என, ‘சப்பாணி’ கதாபாத்திரமாகவே மாறியிருந்தார்.
சந்தைக்குப் போவணும், ஆத்தா வையும், காசு கொடு’. ரஜினிகிட்ட கமல் பேசுற டயலாக்.
பரட்டை’ கதாபாத்திரத்தில், ரஜினி பேசிய, ‘இது எப்பிடி இருக்கு?’ என்ற வசனம், பட்டி தொட்டியெங்கும்
பிரபலமானது
இவர்கள் இருவரையும் விட, ‘மயிலு’ கதாபாத்திரத்தில், ஸ்ரீதேவியை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க
முடியவில்லை.., அதில் வரும் டாக்டர் சொல்லும்..”மயில்” எனும் டைலாக்.
நகைச்சுவை மன்னர் கவுண்டமணியின் “பரட்டை பத்த வெச்சுடியே பரட்ட என்னும் டைலாக் இன்றும் பலரின் மனதில் இந்த கதாபாத்திரத்தினர்.., நீங்காமல் இருகின்றார்கள்.
இப்படி பலரையும் ரசிக்க வைத்த “16 வயதினிலே” திரைப்படத்தை மறக்க முடியுமா.. 46 ஆண்டு 16 வயதினிலே திரைப்பயணம்.