கர்ப்பிணி பெண்கள் நாவல்பழம் சாப்பிடலாமா…?
இனிப்பு துவர்ப்பும் கொண்ட இந்த பழம்.. ஊட்டச்சத்து அதிகமாக நிறைந்த இந்த பழம் நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்..
நன்மை தரும் இந்த பழம்.., கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா என்று சந்தேகம் இருக்கும். காரணம் கர்ப்பக் காலத்தில் நாவல் பழம் சாப்பிட்டால் குழந்தை நீல நிறத்தில் பிறக்கும் என்று சொல்லுவார்கள், அது உண்மையா, பொய்யா என்று பார்க்கலாம்.
கர்பக்காலத்தில் நாவல் பழம் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாவல் பழத்தில்
60கிலோ கலோரி,
15.56 கிரா கார்போஹைட்ரேட்,
0.72 கிராம் புரதம்,
0.23 கிராம் கொழுப்பு,
19 மி.கிராம் கால்சியம்,
15 மிலி மெக்னீசியம்,
17 மிகி பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் இருப்பதால் கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு பழங்கள் மட்டும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்.
* இது ஹீமோகுளோப்பினை அதிகரிக்க செய்யும்.
* கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கும்.
* இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பொட்டசியம் மன அழுத்தத்தை குறைக்கும்.
* வைட்டமின் சி, கே மற்றும் வைட்டமின் டி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் எலும்புக்க ஆரோக்கியத்தை கொடுக்கும்.
கர்ப்பக் காலத்தில் “நாவல் பழம்” எடுத்துக் கொள்ளலாம், ஆனால் குறைவாக எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்…
Discussion about this post